மதன்குமார் வேலாயுதம்

FeTNA பேரவை இயக்குநர் குழு வேட்பாளர்

Hero Image
Image

என்னைப் பற்றி

மதன்குமார் வேலாயுதம்

பேரவை இயக்குநர் குழு வேட்பாளர்

சங்கங்களே முதன்மை அணி

தமிழ்ச் சங்கப் பணிகள்

சியாட்டல் தமிழ் சங்கத்தில் 10 + ஆண்டுகள் தன்னார்வப் பணி (STS)

2025–2026- பொருளாளர்

2024-இணைப் பொருளாளர்

2023- மக்கள் தொடர்பு அலுவலர்

2016- 2022- சங்கத்தின் தன்னார்வலர்

பேரவைப் பணிகள்

2024–2026- பேரவை, பேரவை தகவல்தொடர்பு குழு தன்னார்வலர்

தமிழ்ச் சமூகத்திற்கான எனது பணிகள்

சியாட்டல் தமிழ் நிகழ்வுகளில் 10 ஆண்டுகள் தொண்டு

பெருந்தொற்றுக் கால உடனடி உதவிகள் — தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு உயிர் வளிக் கருவிகள் வழங்கினேன்

ஊடகக் குழு— சங்கத்தின் விழாக்களில் நவீனக் கருவிகளை நானே கையாண்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வெள்ளிகளை சேமித்தேன்

கருவிகள் வாடகைத் திட்டம் — ஊடகக் கருவிகளை முதலீடு செய்து வாடகைக்கு விடுவதன் மூலம் 3 ஆண்டு வாடகை சேமிப்பை சங்கத்திற்கே கிடைக்கச் செய்தேன்

Image

இயக்குநராக எனது எதிர்கால இலக்கு

புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒவ்வொரு சங்கமும் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவேன்

அரசு தரும் மானியத்தை சரியான முறையில் பேரவை பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை நெறிப்படுத்தி தருவேன்

ஒவ்வொரு உறுப்பினர் சங்கமும் தகுதியான அரசு நிதி உதவியை எவ்வாறு பெறுவது என்று தெரிந்துகொள்ள உதவுவேன்

நிறுவன இணை நன்கொடை — மைக்ரோசாப்ட் பணியாளராக, ஒவ்வொரு சங்கமும் MS Give மற்றும் Benevity இல் பதிவு செய்யப்பட உதவுவேன். Microsoft, Google, Apple, Salesforce போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நன்கொடைகளை தகுதியான அமைப்புகளுக்கு தானாகவே இணைத்துத் தருகின்றன. நம் சங்கங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படவில்லை. இதனை நான் மாற்ற உதவுவேன்.

பேரவையுடன் இணைந்த சங்கங்களுக்கு இலவச தொழில்நுட்ப திட்ட உதவி வழங்கப்படும்

ஒவ்வொரு சங்கத்தையும் இலவச தொழில்நுட்ப கருவிகளுடன் இணைப்போம் — Microsoft 365, Teams, Zeffy, Canva, Google Workspace மற்றும் பல.

ஒவ்வொரு சங்கமும் செயலக ஊழியர் நன்கொடை திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள உதவுவோம் பெரும்பாலான சங்கங்களுக்கு தெரியாத நிதி வாய்ப்புகளை தெரிய வைப்போம்

வலிமையான சங்கங்களே பேரவையின் வலிமை

வலிமையான பேரவை அமைய உங்கள் ஒத்துழைப்பையும் வாக்கையும் பணிவுடன் கோருகிறேன்

நன்றி. வணக்கம்!